பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 ஆழ்வார்கள் காலநிலை குறிப்பிக்கும் என்பது சிலர் கருத்து. இவ்வூகம் முதலில் எனக்கு வினோதமாகவே தோற்றியது. ஆயினும், திருமாலின் திருநாமங்கள் எண்ணி றந்தன இருப்பவும், ஆழ்வார்களெவரும் எடுத்தாளாத இந்நாமத்தால் திருமழிசையாழ்வார், பெருமானை விளிப்பது ஒருகருத்தை உட்கொண்டதுபோலும் என்று, அவர் காலநிலையோடு பொருந்தநோக்கும் போது புலனாகின்றது. பல்லவ வேந்தர்களைத் தெய்வாமிச முடையவர் களாகத் கருதியும், அவர்களை ஸத்தியபராக்கிரமன், ஸகலகல்யாணன், புருஷோத்தமன், பராபரன், திரை லோக்யவர்த்தனன், ஸ்ரீநிதி, அநூபமன் என்றித்தகைய கடவுட்பெயர்களால் வழங்கியும் அக்காலத்து மக்கள் சிறப்பித்துவந்த செய்தியைச் சாஸனங்களினின்றும் அறியலாம். சருவேசுவரனுக்குரிய இத்தகைய பொருள்சேர் புகழ்ச்சிப் பெயர்களைச் சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினரான மக்கட்குத் தங்காலத்தார் கண்டவாறு வழங்கியிருப்பது ஆழ்வார்க்கு மிக்க வெறுப்பை உண்டாக்கியிருக்கவேண்டும் என்பது நிச்சயம்; நாக்கொண்டு மானிடம்பாடேன்' என்பர் இப்பெரியார். அதனால், தன்காலத்தரசன் தனக்குத்தகாத குணபரன் என்ற பெயரைத் தரித்திருப்பதினும் வெறுப் புற்று, 'அஃது அனந்தகல்யாணகுண பரிபூர்ணனாய் 1. காலஞ்சென்ற ஸ்ரீ எம், ஸ்ரீநிவாஸ ஐயங்கார், எம்.ஏ., அவர்களே முதன்முதல் இவ்வாறு கருதினவர். (The Tamil studies. pp. 305-6). 2, S. 1.1. rol i Pp. 1-4.