பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வர் 55 அதனால் குணப்ருத் என்ற திருநாமம் பெற்ற எம்பெரு மானுக்கே உரியதாம்' என்ற திருவுள்ளத்துடன் குணப் பரனே என்று பெருமானை இவர் அழைத்திருத்தல் கூடிய தேயன்றோ ? | தீர்த்தகரர் என்று சைநசமயப் பெரியோர்களுக்கு வழங்கும் பெயர் அவர்க்குச் சிறிதும் ஏற்காதது என்ற கருத்தால் “ பண்டிப் பெரும்பதியை யாக்கிப் பழிபாவங் கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே--எண்டிசையும் பேர்த்தகர நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்தகர ராமின் திரிந்து என்று, பூதத்தாழ்வார் உண்மையான தீர்த்தகரராகும் வழி இஃதென்று அருளிச்செய்தலும், " மலைநா டுடைய மன்னே போற்றி கலையா ரரிகேசரியாய் போற்றி" என்று, 'அரிகேசரி எனப் பாண்டியர்கொண்டுள்ள சிறப்புப்பெயர் சிவபிரானுக்கே ஏற்றது' என்ற குறிப்புத் தோன்ற வாதவூரடிகள் பாடுதலும் இங்கு ஒப்பிட்டறியத் தகும். இவ்வாறே ஆழ்வாரும் குணபரப்பெயரையே குணப்பரனென வழங்கினர் என்பது ஏற்றுக் கொள்ளப் 1. இவ்வாறன்றி வேந்தராய் விண்ணவராய்... மற்றெல்லாமாய் என்று இவ்வாழ்வாரும், (நான். 83), பெருந்தறை மேய தென்னவன் சேரலன் சோழன்" (திருவாசகம், குயிற்பத்து,7; எனத். திருவாதவூரடிகளும் பாடியவாறு, 'திருவுடைமன்னர் உருவமாக நின்று அருள் புரிபவனும் கடவுளே' என்ற கருத்துடன் இவ் வாறு கூறினர் எனினும் பொருந்தும்.