பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமழிசையாழ்வார் 63 சிலவும்' இவனை அவ்வாறே குறிப்பிடுகின்றன. இவற்றால், இச்சோழன் ஏறக்குறைய ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவனென்று கருதல் குறை வாகாது. ஆகவே , செங்கணான் வாழ்ந்த அந் நூற்றாண்டும் அடுத்த நூற்றாண்டுமே பொய்கையார் முதலியவர்க்கும் ஏற்றதாதல் கண்டுகொள்க, சிலர் கருதுவதுபோல், அப்புலவர் காலத்து நிகழ்ச்சியாகக் கொள்ள வேண்டுதவன்று. புறநானூற்றுள் (48)-"தொண்டி, அஃதெம்மூரே யவனெம் மிறைவன் என்று இப்புலவர் பாடியது, தாம் எடுத்துக்கொண்ட புலவராற்றுப்படைத் துறைக்கேற்ப ஆற்றுப்படுக்கும் புலவன் கூற்றாகக் கூறியதேயன்றிப் பிறிதன்றெனபதும் அறியத்தக்கது. இனிப்பொய்கையாராற் பாடப்பட்டவனாக மேலே கூறிய திரையன் என்பவன், சிலர் கருதுவதுபோல், பெரும் பாணாற்றுப்படை கொண்ட இளந்திரையன் என்று கொள்வ தற்கு ஆதாரமின்று; அவ்விளந்திரையன் வழியில் வந்த சிற்றரசனாகக் கொள்ளற்குரியனென்க. 1. சோழ வமிசாவளியை விரிவாகக் கூறும் -அன்பில், திருவாலங்காடு, கன்னியாகுமரி முதலிய இடங்களிலமைந்த சாஸனங்கள், செங்கணானைக் - கரிகாலன் வழித் தோன்ற லாகவும், 9 ஆம் நூற்றாண்டினனான விசயாலயனுக்கு முன்னோனாகவும் இடைப்பட வைத்துக் கூறுகின்றன. இதனால் விசயாலயனுக்கு முன்' பிரபலம் பெற்றிருந்த சோழன், செங்கணான் ஒருவனே என்பது பெறப்படும், திருஞான சம்பந்த மூர்த்திகளால் இச்சோழன் பாடப் பெற்றிருத்தலின், 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே அவ்வரசன் காலமாகும்; அஃது ஐந்தாம் நூற்றாண்டெனல் பொருந்து மென்க.