பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 ஆழ்வார்கள் காலநிலை " உடுத்துக் களைந்தநின் பீதக வாடை யுடுத்துக் கலத்ததுண்டு தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடுமித் தொண்டர்களோம்" (ஷை, 9 ) “ தோட்ட மில்லவள் ஆத்தொழு ஓடை துடைவையுங் கிணறும் இவையெல்லாம் வாட்டமின்றியுன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் ' வன்மை யாவதுன் கோயிலில் வாழும் வயிட்ட ணவனெனும் வன்மைகண் டாயே (பெரியாழ். திருமொழி, 5, 1, 3). என்பன முதலிய இவ்வாழ்வார் பாசுரத்தொடர்களால் அறியப்படும். இப்பெரியார் காலத்தே இராசபுரோகித ராகவும் பரமபாகவதராகவும் விளங்கியவர், திருக் கோட்டியூர்த் தலைவரான செல்வ நம்பி என்ற சீரியோர் என்றும், இவ்வாழ்வார்காலத்து விளங்கிய திருமாலடி யனான அரசன் பாண்டியவமிசத்தவன் , என்றும் ஆழ்வாரே விளங்கக்கூறுதல் அடியில் வருமாறு:“ அல்வழக் கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்" (திருப்பல். 11). " நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமான துங்கனை நாடொறும் தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்' (பெரியாழ். திருமொழி. 4, 4, 8).