பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 ஆழ்வார்கள் காலநிலை திருத்தம் பெறுவதற்கு இடமேற்பட்டிருக்கவுங் கூடிய தன்றோ? அப்பாண்டியனது சமயவிசாரத்துக்கு இவ் வைஷ்ணவமந்திரியே காரணமாக அமைந்திருத்தல் வேண்டும். இம்மந்திரியின் ஊராகிய களக்குடி 1 பெரியாழ்வார் அவதரித்த ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு நெடுந்தூரத்ததும் அன்று. அதனால், அப்பெரியாரது திருவடிசம்பந்தம் இம்மந்திரிக்கு இருந்தது போலும் என்று சங்கிக்க இடமுண்டு . மற்றும், தந்தை மாறவர்மனது ஆட்சி முடிந்ததும் அவன் மகன் நெடுஞ்சடையன் தக்கபருவத்திற் பட்டம் பெற்றவன் என்பது, அவனது முதன் மூன்றுவருஷத்து ஆட்சிச் செயல்களாக வேள்விகுடிச் சாஸனங் கூறும் வரலாறுகளினின்றும் பெறப்படுகின்றது. இப்பாண் டியனது 17-வது ஆட்சியாண்டில் அமைந்த சீவரமங்கல சாஸனத்தில் - இவன்“ பாரந்தகன்பரமவைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணிநீண்முடி நிலமன்னவன் நெடுஞ்சடையன் " என்று புகழப்பட்டுள்ளான். அச்சாஸனத்தை எழுது வித்த ஆணத்தி (ஆஜ்ஞப்தி), முற்கூறிய உத்தரமந்திரி மாறங்காரியின் வழியினனாகிய தீரதரன்மூர்த்தி எயினன் 3 என்பவன், 1, இதுவரை கருதப்பட்டபடி, இவ்வூர் களக்காடு அன்று என்பதை நம்மாழ்வார் வஷயமாகக் கூறுமிடத்து விளக்குவேன். 2. Madras Muscum Plates of Parantataka Nedunjadaiyan (Indian Antiquary, Vol. xxii). 3. மாறங்காரியின் ஊராகிய களக்குடியும், அவனுக் குரிய வைத்திய குலமும், உத்தரமந்திரி பதவியும் இவனுக்கும்