பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

                இக்பால் இலக்கியமும் வாழ்வும்

                      ப. சீவானந்தம்

"புதிய மனிதன்' உருவாகிறான் என்று நம் பேரறிஞர்
கிருட்டிணமூர்த்தி அண்மையில் பேசி வருகிறாா். பெசன்ட்
அம்மையாரால் உலக குருவாக, ஞான ஒளியாக வளர்க்கப்
பட்டவர் இவா்.

உலகம் ஒன்றுபட்டுவிட்டது, நாடுகள் வீடுகளாய் ஆகி
விட்டன; ஒரே உலகம், ஓா் உலகம் என்ற கருத்து
செல்வாக்குப் பெற்று வருகிறது. உலகின் பல்வேறு அறிவு
வளர்ச்சித் துறைகளிலும் ஏற்படும் மகத்தான மாபெரும்
முன்னேற்றங்களும் சாதனைகளும் 'புதிய மனிதனை'
உருவாக்குகின்றன. -

இந்தப் புதிய மாமனிதனைப் பாரதி பாடினான்; இக்பால்
பாடினாா்; அனைத்துலக மனிதனைநோக்கி ஓடிய இரவீந்திரநாதர்
பாடினாா்.

“ஆகச் சிறந்த மனிதனை மனிதனுடைய சக்தி, வல்லமை
சாகித்தியக் கூறுகள் அனைத்தையும் இனிய முறையில்
ஒருங்கிணைத்து நிற்கும் முழுமைபெற்ற மனிதனைக் காணும்
வேட்கை . (The Quest for Perfect Man) — இதுதான் இக்பாலுடைய
தத்துவத்தின் திரண்டநிலை” என்று அறிஞர் கூறுகின்றனா்.

9