பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கும் உரிமைக்கும் தலைவி என்று வேட்கின்றாய், வாழ்த்துகின்றாய், மக்கள் பேரில் கெடுதலைக்குத் திரைமறைவில் உள்ள பேயே கேடுசெயும் தனியாண்மை அதிகாரம்தான்.

சட்டசபைச் சீர்திருத்தம் வாக்கெடுப்புச் சலுகைகளும் உரிமைகளும் மேலை நாட்டின் மட்டற்ற மயக்கத்தால் றக்கம் ஊக்க மகிழ்ந்தேற்ற மருந்துகளே ஆகும் யாவும்.

சட்டமன்றில் தெருப்பெழவே பேசுவார்கள் சட்டமன்ற இருக்கைவிட்டு எழும்போதேதம் கொட்டாவி விட்டதென மறந்து போவார் குடிகளினைக் கடவுள்தாம் காக்க வேண்டும்.

அரசாட்சி செல்வர்களை மேலும் மேலும் பணம்பெருக்கும் ஆலைகளாய் மாற்றும் ஏற்றும் முரசொலிப்ப தெல்லாமே வெறும் முழக்கம் முகத்தோற்றம் வேறு, அகத்தோற்றம் வேறு.

செம்மலர்க்கா, மணத்தோட்டம் என நினைத்தாய் சிறைச்சாலை என்பதனை அறித்திலாய்நீ நம் மரத்தின் கூடென்று மகிழ்ந்தாய், ஆட்சி

நமைத்தூக்கும் தூக்குமரம் உணர்வாய் நீயே.

111