பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை

வாழ்வை திலைக்கச் செய்யும் வன்மை,
வளமை கலைக்குண்டு,
சூழ்ந்துள வைய உண்மை அனைத்தும்
துலங்குதல் கலையாலே.

முன்காணிகளே, முன்காணிகளே
முழுமைக் கலையுணர்வீர்
அன்பால் உண்மை காணுவதே நல்
கலையின் அருள்என்பீர்.

கலையின் இலக்கு வாழ்வாம் நெருப்பைக்
கனன்றெழச் செய்வதுவே
நிலையில்லாத நீர்க்குமிழாக
நிமிர்தல் கலேயன்றே.

இளவேனில்தரும் கோடைமாரி
இன்பம் போலின்றேல்,
உளத்தே பொங்கும் கலையின்
ஓட்டம் உண்மை உணர்த்திடுமா?

உப்பும் உணவும் ஆறும் நீரும்
ஒப்பது கலை; இன்றேல்
சிப்பியும் முத்தும் பயனற்றவைபோல்
செழிக்கா துயர் கலையே.

சமூகப் புத்துயிர் உண்மைக் கலையின்
சார்பில் பிறப்பதுவே,
சமூகம் உண்மை சார்ந்திடவிலையேல்
கலையும் செத்ததுதான்.

112