பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீயும் நானும்

இரவினை நீ படைத்தாய் - உலகில்
எழில் ஒளி விளக்குகள்
நான்படைத்தேன்
பரந்த மண் நீ படைத்தாய் - பயன்
படுகின்ற பாண்டங்கள்
நான் படைத்தேன்.

கல், மணல். நிலம்படைத்தாய் - அதில்
காவனம், அரும் பயிர்
நான்படைத்தேன்.
கல்லினைத் தணலில் இட்டே - ஒளிக்
கண்ணாடி வண்ணங்கள்
நான் படைத்தேன்.

நஞ்சினை நீ படைத்தாய் - அதை
நலம்தரும் அமிழ்தென
நான் படைத்தேன்
கொஞ்சமோ நின் கொடைகள் - அவை
வாழ்வொடு கூட்டிநான்
குணங்கள் கொண்டேன்.

113