பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதோ ஒரு வானம்பாடி

சொக்கு சுப்பிரமணியன்

பாரதத்தின் தலைநகர் தில்லி குடியரசுத் திருநாள் கோலம் பூண்டிருக்கிறது. வண்ணங்கள் தெறிக்கும் கொடிகளால் தலைநகரின் ராஜபாட்டை (ராஜிபத்) எழிலுற விளங்குகிறது, இலட்சக்கணக்கான மக்கள் பாட்டை நெடுகிலும் நின்று நாட் டைக் காக்கும் காவலர் அணிவகுப்பைக் காணக் காத்திருக் கிருச்கள். அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்ள ராஷ்டிர பதி மேடையில் வீற்றிருக்கிருர். குடியரசுத் திருநாளின் கோலாகலப் பவனி துவங்குகிறது. படையினர் அணி வகுத்து வருகிருச்கள்; அவர்களுக்கு முன்னே முப்படை இசைக் குழுவினர் உணர்ச்சி முறுக்கேற்றும் ஒரு பாடலை இசைத்த வண்ணம் அழகு நடை பயில்கிருர்கள் ஒலிக் கின்ற அந்தப் பாட்டோ...

  • ஸாரே ஜஹா(ன்) லே அச்சா(ஹ்)

ஹிந்துஸ்தா (ன்) ஹமாரா ஹம் புல்புலே{ன்{ ஹை(ன்) உஸ்கி ஏ குவிஸ்தான் ஹமாரா'

என்னும் மகத்தான வெற்றிப் பாட்டு ஆகும்.

$34