பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்த்திசை நாடுகள் இறைவனேக் கண்டன; ஆளுல் இவ்வுலக நன்மைகளைக் கசனத் தவறிவிட்டன; மேலே நாடுகளே. இவ்வுலகப் பயன்களில் ஆழ்ந்து இறைவனேயே மறந்துவிட்டன'

என்று பாடிய இக்பால் நாட்டு நடப்புகளைக் கண்டு துயருற்ருச். 'நீ விழித்து எழுவதற்காக நான் அழுகின்றேன்’ என்று சோக கீதம் இசைத்தார் அவர். அடிமைத் தளையில் பிணைப்புண்டு. அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த நாட்டை நினைத்து, இக் பால் இதயம் கவிதையைப் பொழிந்தது.

'எழுமின் கீழ்த்திசையின் தொடுவானத்தில் இருள் சூழ்ந்திருக்கிறது ; கனல் தெறிக்கும் நம் குரலால் உறங்கும் சபையில் ஒளியேற்றுவோம்"

என்று விடுதலைக் கீதம் பாடிஞர் மகாகவி இக்பால். வாழ்விற்கு வழக்கறிஞர் தொழில் மேற்கொண்டார். ஆளுல், அத் தொழிலில் அவர் காட்டிய நேர்மையைப் பார்த்து உலகமே வியந்தது.

அடிமைத்தனத்தை அடியோடு வெறுத்தவர் அல்லாமா இக்பால்- அடிமைத்தனத்தில் கலைகளை இழக்கின்ருேம் ; சமயத்தை இழக்கிருேம் , அறிவையே இழந்து விடுகிருேம்’ என்று அவர் கருதினர். அடிமை உடலில் உயிர் நிலப்பதற் காக உள்ளத்தையே விற்று விடுகிருன்’ என்று வேதனைப்

الأسيتي