பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அகன்றுவிடும் காலம் வரப்போகின்றது.வானத்தின் நிறத்தைச்
     சற்றுக் கண்ணெடுத்துப்பார். அது கருஞ்சிவப்பாயிருக்கிறது.
     இத் தோற்றமானது, பரிதி உதித்து மேலோங்கி வரும்
     அறிகுறியாகும்.”

     இந்த நூற்றாண்டை மகமது இக்பால் தமதாக்கிக் கொண்டு
     விட்டார். ஆயிரமாயிரவரை அவர் தன்னந் தனியாக
     வெற்றி கொண்டு விட்டார். நூறு குதிரை வீரர்களின்
     வல்லமையுடன் வல்லமைமிக்க புலவர் பெரும் படையை
     அவர் ஓடோடச் செய்து விட்டார். அறைகூவலுக்கும்
     அழைப்புக்கும் ஈடாக மாபெரும் திறன்கள் படைத்துத்
     திகழ்ந்த அவர், மற்றவர்களை மிஞ்சி நின்று சிறந்து விட்டார்
     என்று இக்பாலைப் பாரசீக மகாகவி பகார் புகழ்ந்துரைத்
     துள்ளார்.

     "பழைய ஆட்டு மந்தைகளின் தலைவன் பிளேட்டோ"
     என்று இக்பால் கூறினர். கவியினுடைய உள்ளம்,
     கலைஞனுடைய உள்ளம் அனிச்ச மலரினும் மெல்லியது என்று
     அவர் கூறினார். "உன்னுள்ளே இறைவனுடைய பண்பை,
     வளர்த்துக் கொள்” என்று மனிதனிடம் கூறினார். களிமண்ணை
     மனிதனாக்க வேண்டும். அதுதான் கலையின் தொழில் என்று
     இக்பால் கூறினர். "சமுதாயத்தில் ஒரு மணியாக, ஒரு ஜீவ
     உறுப்பாகத் திகழ்வாயாக. இலட்சியமற்ற புழுதியாகச்
     சுழலாதே" என்று மனிதனை அவர் கேட்டுக்கொண்டார்.
     "இன்றைக்கு உள்ள இரகசிய உள்ளம் எனக்கு ஒரு
     பொருட்டல்ல; வருங்காலத்துக் கவிஞனின் குரலே என்னு
     டையது” என்று இக்பால் கூறினார். வாழ்வு சதா மாறிக்
     கொண்டே இருக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
     வாழ்க்கை அமரத்தன்மை உடையது என்பதை அவர்
     உரத்த குரலில் கூறினர்.

     மனிதன், பஞ்சணையில் சோம்பேறியாகப் புரண்டு படுத்து
     உறங்கப் பிறத்தவனல்லன் என்று இக்பால் கூறினார். நீ
     இராஜாளிப்பறவை; நீ வல்லூறு. உனது விதி, ஓய்வறியாப்

12