பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவென மயக்கம் ஊட்டும் கதைகளைக் கேட்டது போதும்! மக்களின் எழுச்சிப் பாடல். மகிழ்ச்சி வெள்ளம் கொட்டும்! பூமியின் கருப்பை நீங்கிப் புதியதோர் கதிரோன் வந்தான்! மறைந்திடும் மீன்களுக்காய் - மனத்தினில் கரைவதேைே? தண்களே, சங்கிலியைத் தகர்த்தது மனிதப் பண்பு! இழந்திட்ட சொர்க்கம் வேண்டி எத்தனை நாள் அழுவான் ஆதம்’

என்று பாடி ரஷ்யப் புரட்சியை வாழ்த்தினர் கவிஞர் @ಹLTEು. 'உன் ஆத்மாவின் உள்ளே ஒரு பொருளைக் கண்டுணர் என்று உரைத்தவர் இக்பால். -

" முன்னர்த் தோன்றும்

இருளே அகற்றிக் கிழக்கில் தோன்றும் சூரியனைப் போல் எழு’

என்று கீதம் இசைத்த வானம்பாடி, 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் நான் மறைந்து விட்டது.

அந்த வானம்பாடியைப் பற்றிப் பேராசிரியர் வாடியா கூறியது இங்கே நினைக்கத் தகுந்த ஒன்ருகும், இக்பால் இஸ்லாமியர்

  1. 42