பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    எண்ணிப் பார்!
    சிந்தையற்றவனே இந்த 
    நாட்டினை எண்ணிப் பார்நீ 
    நொந்தழச் செய்யும் நாள்கள் 
    நொடிதொறும் வளர்தல் காணாய்! 
    வெந்தழல் உனை அழிக்க 
    விரைகுது மேலை நாட்டில், 
    இந்தியா உணரா விட்டால் 
    அழிவினை எய்தல் திண்ணம்,
    நடப்பதை நாளை நாட்டில் 
    நடந்திடப் போவதை நீ 
    நடக்கட்டும் எனஇருந்தால் 
    நாளைநின் வரலா றெல்லாம் 
    கிடப்பினில் பழங்கதையாய்க் 
    கேளாமல் போதல் கூடும் 
    அடிச்சுவ டேதும் காணா
    தழுந்தியே புதைதல் கூடும்!
    சாதியும் சமயக் காழ்ப்பும் 
    சாய்ந்திடும் வீண் செருக்கும் 
    மோதியுன் இனத்தையெல்லாம் 
    முரித்தன வெறித் தனத்தால் 
    ஓதிடும் நல்லெண்ணத்தை 
    உணர்த்தினால் உணர்ந்தே உண்மைச் 
    சேதியை ஏற்றுக் கொள்க 
    செழித்திடும் இந்த நாடே.


இ-3