பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    மலரே
    கொழிக்கும் அழகின் மலரே 
    கொம்பிலிருந்து கொய்து, 
    விழிக்குள் மனத்துள் இனிக்கும் 
    வியப்பை அழிக்க நினையேன்.
    அந்தோ இதனை உணர்ந்தும் 
    ஆவது அறிவேன் மலரே, 
    இந்த என்கை கொடுமை 
    இயற்றப் பிறந்ததன்றே.
    வானம்பாடிக் கண்கொண் 
    டுன்னை, வனப்பைக் காண்பேன், 
    நீநம்பாய் ஓ, மலரே 
    நிலத்தின் நெஞ்சக் கனல்நீ!
    
    -----------
    நின்றன் இதழ்தான் சற்றே 
    நெளிந்தசைந்து வீசும் 
    தென்றல் காற்றில் துடித்தால் 
    சிந்தும் கண்ணீர் மழையே!
    -----------
    எழுவாய், அதோ அக் குன்றில் 
    இளவேனில் காலம் பார்! 
    இழும்என் மொழியில் பாடல் 
    இசைக்கும் பறவை இனங்கள்.
                  47