பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அரும்பூ மலரும் காலமுமே
     ஐயோ முடிந்து விட்டதுவே.
     அழகுத் தோட்டத்து இசைக்கருவி
     அறுந்து முரிந்து போனதுவே,
     விருந்துப் பாடல் பாடியபல்
     விதமாம் பறவைக் கூட்டங்கள்
     கிளையிலிருந்து விரைந்தனவே.
     எனினும், கேண்மைக் குயில் ஒன்றோ
     அருந்தும் தனது பாட்டிசையில்
     தனிமை அமைதிப் பூங்காவில்
     அருமைப் பறவை உணர்ச்சியலை
     அயரா தியங்கப் பாடிடுதே!
   
     இறந்து போவதிலே இன்பம்
     இருந்தால் என்ன உயர்வுளது?
     ஏதோ இன்பம் இருக்கும் எனில்
     இன்னல் கடவில் மூழ்கியே நம்.
     பரந்த உள்ளக் குருதியினைப்
     பற்றி உறிஞ்சிக் கொள்வதிலே
     படரும் இன்பம் துன்பன்றோ
     பாவலன் என் உள்ளத்துச்
     சிறந்த ஆடிப் பேழையிலே
     சிந்தும் கண்ணீர் முத்துகளோ
     சேர்ந்து துடிக்கக் கண்டிடலாம்
     செப்பும் மொழிக்குள் அடங்காவே.
     திறந்த என்றன் நெஞ்சத்தில்
     மனஎழுச்சி, பேராவல்
     தீக்கொழுந்தாய் மேலோங்கிச்
     சிறப்புணர்ந்துக் காத்துளது.
     பறவை என்னை, என்பாட்டைப்
     பார்க்கக் கேட்க யாருமில்லை.
     பாடும் உணர்ச்சிப் பாடல்தரும்
     பண்ணின் நுண்மை அறிகிலரே.

54