பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

     மறுமொழி

     தொழிலில் திறமை இல்லாத
     துப்புக் கெட்ட இனம் ஒன்று
     சுழலும் உலகில் இருக்கும் எனில்
     தோழரே நம் இனம் ஒன்றே.
     விழிப்பிலாத நிலைமையிலே
     வீழ்ந்திருக்கும் இனம் ஒன்றும்
     இருப்பின் அஃதும் நம் இனமே;
     வைக்கோற் போரில் இடிவீழ்ந்தே
     அழிந்த யாழாய்ப் போனதுவாம்
     இனம்ஒன் றஃதும் நம்இனமே;
     அந்தோ முன்னோர் புதைகுழியை
     அகழ்ந்து விற்று வாழும் இனம்
     ஒழியா துள்ளதெனில், அதுவும்
     நந்தம் இனமே; கல்லறையை
     ஒழுங்காய் விற்று வாணிகம்செய்
     உரமும் உயர்வும் பெற்றுள்ளீர்.
     தொழுகை செய்யும் உங்கட்குத்
     தோன்றாத் துணையாய்ச் சிலைகிடைத்தால்
     விற்கும் கலையில் தோற்பீரோ?
     தொன்மைக் காலத் துழல்வோரே!

     செழித்த பூந்தோட்டக்காரா,
     சிறந்த தோப்பின் சிதைவுற்ற
     சிறுமை கண்டு கவலையுறேல்
     சிதைந்த கிளையின் கோப்பிருந்து
     விழிக்கும் குழந்தைக் கண்ணொளிபோல்
     விண்மீன் உமிழும் மாலொளிபோல்
     விரிந்து நறுந்தேன் மலர்பூக்கும்
     காலம் விரைந்து வளர்கிறது.

55