பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     கட்டுப்பாடு

     கட்டுப் பாடெனும் விதியினால்
     கசியும் நீர்த்துளி பெருகியே,
     மட்டுப்பாடிலா ஆழியாய்
     மாறுதல் உலகியற்கையாம்.

     நுண்மண்ணின் துகள் கூடியே
     நூறு நூறு நூறாயிரம்
     வண்மைப் புன்செயாய் நன்செயாய்
     வனங்களாய்ப்புகழ் பெற்றிடும்.

     கட்டுப்பாட்டினால் யாவுமே
     கலந்துரம்பெறக் கண்டும்நீ
     கட்டுப்பாடதன் ஒற்றுமைக்
     கண்ணியில் முடிச்சவிழ்த்தல் ஏன்?

59