பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

     நெஞ்சின் துயா்

     என்னுடைத் தாயக மக்கள் அனைவரும்
     அன்பின் கமுக்கத்தைத் தாம்மறந்தாா்,
     இன்றகோ வாழ்க்கையின் போா்க்களம் தன்னில்
     இயலாத மாந்தராய் மாறிவிட்டாா்.

     ஒருமைக்கு மாறாகப் பிாிவின் உணா்ச்சியே
     ஓங்கும் புயல்எனச் சூழ்ந்திடுதே,
     ஒருநெற் குவியலே ஓராயிரமாயின்
     உள்ளத்தி துன்பம் வலுக்கிறதே.

     அஞ்சிய நாள்கள் என் கையருகேமிக
     ஆா்த்துக் கிளா்ந்து நெருங்கினவே,
     நெஞ்சின் துயா்எலாம் வாழ்வின் வரலாற்றில்
     நீக்கப்படுகின்றோம் என்றனவே.

67