பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

     சிறந்தோன்

     ஓடும் குருதியில்
     நெருப்பின் அலைகள் பாய்ந்தாற்போல்
     பாடும் பாடலில்
     காதல் வேட்கை படரட்டும்;

     பாடு பொருளில்
     குறிக்கோள்கள் அற்றால் பாட்டேது?
     தேடும் பொருளாய்ப்
     பாட்டானால் அதில் தீயேது?

     கலையில் சிறந்தோன்
     இயற்கை அனைத்தும் கைக்கொண்டு
     வலைச்சொற் குள்ளே
     குறிக்கோள் வாழ்க்கை வளைக்கின்றான்;

     நிலைபெற்றிடும் ஒரு
     புத்துலகத்தை நிறுவுகிறான்;
     அலைமேல் அலையாய்
     மலைபோல் வளர அருள்கின்றான்.

72