பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     துன்பக் கோட்பாடு

     துன்பம் இளைஞனை
     இன்கன விருந்து விழித்தெழச் செய்யும்

     * * * * *

     காதலி யோடு காமுறும்
     காதலும் சாதலில் கலப்பது இல்லையே;
     துன்பினைப் போலது
     அன்புறு நெஞ்சில் அகலாதிருந்திடும்.

     * * * * *

     அசைந்து செல்லும் வாழ்க்கை ஆற்றின்
     இசையும் ஒன்றே, இயல்பும் ஒன்றே.
     மலையிலிருந்து நிலைபெயர்ந்த
     அருவியாய் நம்முன் மறுவியுள்ளது.

     நாம் பிரிகின்றோம்
     ஆம், பின் உலகின் அகன்ற மடியில்
     நாடித் தேடிக் கூடிக் களிக்கவே.
     ஆனால்,
     சின்னேரப் பிரிவினை எண்ணி
     எந்நேரமும் நாம் கண்ணீர் பொழிவதா?

90