பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     இறைவனே!

     இறைவனே என் மார்புக் கூட்டினுள்
     எதையும் அறிந்திடும் நெஞ்சைத் தந்தருள்;
     நிறைந்த மதுவில் திளைத்தே நினைவுகள்
     நிரம்பும் விழிகளை உவந்தே ஈந்தருள்.

     * * * * *

     தாவூ தின் ஒளிப் பாட்டின் ஆற்றலால்
     தரையின் புழுதியை ஒளிவிளக் காக்குக;
     நாவூ றும்சுவை மதுவின் ஒவ்வோர்
     அணுவிலும் தீயின் கனலே ஏற்றுக.

     * * * * *

     என்றன் நாட்டின் மூங்கில் காட்டினில்
     இன்இள வேனில் தென்றல் வீசிடும்,
     குன்றின் அருவி கூவும் குயிலுடன்
     குழலின் இன்னிசைத் தீப்பொறி பேசுக.

     * * * * *

     நன்செய் புன்செய் நானிலப் பயிர்கள்
     நல்ல மாமழை நட்புக் கேங்கிடும்
     அன்புற் றார்த்திடும் அனைத்துயிர் கட்கும்
     அரிய மழை முத் தணைத்துத் துய்த்திடு.

     * * * * *

     வெற்றி வேந்தர் வீரவாள் இன்றியும்
     வெஞ் சினங்கொள் மறவர் இன்றியும்,
     பற்றும் வாளின் துணையிலாது அன்பினால்
     பற்பல நாட்டைப் பற்றுதல் ஆண்மையாம்.

93