பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     தன்உ ளத்தினைத் தன்கை ஏந்தியே
     தருக்குடன் புற உலகில் காட்டலும்
     தன்பழம் உடலில் புத்துணர்வினைத்
     தந்து மாந்தனைத் தருக்கச் செய்திடேல்.

     * * * * *

     அமைதி அற்ற என்றன் நெஞ்சினுள்
     அலைகடல் போராட்டம் நீக்குக;
     அமைந்த சிக்கலில் மேலும் சிக்கல்
     அமைக்க வேண்டுவேன் அறிவு கொளுத்தவே.

     நின்னை விழித்தெழச் செய்யவேஅட
     நீள இரைந்துநான் அழுது கூவினேன்,
     அன்பு, கூச்சலோ ஓசையோ இல்லாது
     அமைதி யாகத் தன்கடன் ஆற்றுமே.

     * * * * *

     கோயில் கோட்டையில் நீண்டகாலமாய்
     வாழ்க்கை, துன்பின் அழுகை ஆயிற்றுத்
     தோயும் அன்பின் அவை இருந்த நல்
     அறிஞன் தோன்றிடும் வரையில் துன்பமே!

     * * * * *

     மண்ண கம்பல மலைகள் தாங்கினும்
     மடியினில் பல இடிகள் வீழினும்
     எண்ணிலாச்சுமை நமது நெஞ்சில்வாழ்
     இழிவின் எண்ணப் புழுதியை ஆக்கின.

     * * * * *

     என்றன் உள்ளத்து எழுச்சிக் குன்றினில்
     எரிமலைத்தீ ஒன்றை எழுப்பிடு!
     நின்று எதிர்க்கும் நக்கீரனைப் போல்
     நெருப்புக் குருதி நரம்பை உடையவன்.

94