பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     புதிய நாகரிகத்தின் பொய்மையைப்
     பூண்டிலாமலே பொசுக்கி நீக்கிடு;
     மதியினில்நினை வெளிச்சம் ஆக்கியே
     மனத்த கத்துநீ இறந்து சாய்ந்திடு.

     அடிமை எண்ணக் கலைகள் அனைத்தினும்
     சாவின் அடிச்சுவடு ஆர்ந்து கூத்திடும்
     அடிமைத் தனத்தின் மாய மருட்கைகள்
     ஆயிரம்மொழி நாவிற்கு எட்டுமோ?

     * * * * *

     அடிமை தன்உள் ளுணர்வை அறிவினை
     ஐயகோ மிக மலிவாய் ஈகிறான்;
     உடலை உயிரோடும் இருத்த எண்ணியே
     உள்ளம் தன்னை விற்று விடுகிறான்.

95