பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

அவர் உண்மையைச் சொல்கிறார், அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது அறிகிறேன். ஏன்? இதைக் கேட்கும் ஆண்மகன் கொஞ்சம் பின்வாங்குகிறான். எப்படியும் பின்னால் பெண் அடக்கியாளப் போகிறாள். தன் அவசரப்பட்டு அதை முன்கூட்டிச் சொல்ல வேண்டும்.

மேல் நாட்டுப் பெண்களின் போக்கில் வெளியே சம உரிமை என்று பேசப்பட்டாலும் அவன் அவளிடம் அடங்கி நடக்கும் பண்புதான் மிகுதியாகக் காணப்படுகிறது. காரணம் விவாகரத்து என்ற கத்தி அவள் கையில் இருக்கிறது, அதே நிலை தான் அவளுக்கும்.

நம் இளைஞர்கள் ஒரு சிலர் கிழக்கையும் மேற்கையும் இணைத்து ஒரு சங்கமமாக்கி அதில் நிறக் கலவையைக் காணவும் செய்கின்றனர். அவள் கிழக்கே வருவது இல்லை; இவனால் மேற்கே போக முடிவதில்லை. இவை எல்லாம் தவிர்க்க முடியாத புதிய பண்பாட்டுக் கலப்பு, பிறக்கும் குழந்தைகள் அந்த நாட்டு மண்ணின் வளத்தால் ஒளி பெறுகின்றார்கள். மாற்றும் பெறுகிறார்கள்.

நம்முடைய இளைஞர்கள் மாறவில்லை; அவர்கள் மாற்றத்தை விரும்பவில்லை, சில சொற்கள் அவர்களுக்குப் பழக்கமாகி வருகின்றன; அவையும் மேல் நாட்டுத் தாக்கமே. ‘தான் பார்த்துப் பெண்ணை முடிவு செய்வது’ என்பது ஓரளவு இரு தரப்பிலும் இப்பொழுது ஒரு தெளிவு ஏற்பட்டு வருகிறது.

சாதகத்தில் தொடங்கி உறவு முறைகளில் உழன்று கொடுக்கல் வாங்கல் கணக்குகள் முடித்தாலும் பெண் பையனைப் பார்த்து மறுப்புச் சொல்லாமல் மவுனம் சாதிப்பாள். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்று விளக்கம் சொல்லப்படும். பையன் ‘சரி’ என்று ஒப்புக்