பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

தனி மனிதர்கள் சில விஷயங்களில் ஆர்வம் காட்டுவது உண்டு. எப்பொழுதும் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறமுடியாது. சில பத்திரிகைகள் நிர்வாணக் காட்சிகளை வெளியிடுகின்றன. அவற்றைச் சிலர் புரட்டிப் பார்த்து என்ன இருக்கிறது என்று ஆர்வம் காட்டுவது இயல்பு. ஆரம்பத்தில் பத்திரிகைகள், போட்டோக்கள் இந்த ஆர்வத்துக்கு விருந்து அளித்தன. வீடியோக்கள் அமலுக்கு வந்ததும் அந்த எல்லையையும் அவை தொட ஆரம்பித்துவிட்டன. ‘நீலப்படங்கள் ‘ ஒளி மறைவாக எடுக்கப்பட்டுத் தனியார் கரங்களுக்கு விற்பனை ஆகின்றன. அது அவர்கள் தனிப்பட்ட போக்குகள். இவற்றிற்கெல்லாம் அங்குத் தடை விதிப்பது இல்லை; இதைப் பற்றிய விமரிசனங்கள் அங்கு நடைபெறுவதும் இல்லை. சில் கவர்ச்சிப் படங்கள் பால்பொருள் அடிப்படையில் எடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட இடங்களில் திரையிடப்படவும் செய்கின்றன. அவை அரசாங்கம் அனுமதித்து உள்ளன. இவை தனிப்பட்டவர்களின் மனப் போக்குகள்: ஒரு சிலர் ஒரு சில நேரங்களில் இதைப் போன்ற படங்கள் பார்க்க விரும்புவதை அவர்கள் தடை செய்வது இல்லை; இந்தத் திரை அரங்குகளில் முதியவர்கள் ஓய்வு பெற்றவர்கள் கடந்த கால நினைவுகளை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ளச் செல்வதுபோல் பொழுது போக்குகின்றனர். ஐரோப்பாவில் எல்லா முக்கியமான நகர்களில் இந்தத் திரையரங்குகள் செயல்படுகின்றன. இவற்றைத் தவறு என்று யாரும் அங்குக் கருதுவது இல்லை. அவற்றைத் தடை செய்வதும் இல்லை, அங்கே இத்தகைய போக்கீடுகள் இருப்பதால் பால் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆட்படாமல் இவற்றைப் புரிந்து கொண்டு சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். அதனால் அவர்களுக்கு அதிகமாக மன அதிர்ச்சிகள் ஏற்படுவது இல்லை,