பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

டவர்” என்ற கோபுரம் அந்த நகரத்தின் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது. வெறும் இரும்புத் தகடுகள் (Steal frame) இவற்றை இணைத்து ‘ரிவிட்’ அடித்துப் பெரிய கோபுரம் அகலமாகத் தொடங்கிச் செங்குத்தாக எழுப்பி இருக்கிறார்கள். இடையில் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க ஹோட்டல்களும் கடைகளும் இருக்கின்றன. உயரமான அந்த இடங்களுக்குச் செல்ல ‘தூக்கிகள்’ அமைத்து இருக்கிறார்கள். அந்த ஊர்ப் பள்ளிச் சிறுவர்கள் ‘எக்சர்ஷனாக’ அந்த இடத்திற்கு வருகிறார்கள், கும்பல் கும்பலாக அவர்கள் ஆசிரியர்களோடு வந்து இன்பப்பொழுதாக ஆக்குகிறார்கள். பாடிப் பறக்கும் பறவை ஒலிகளை அந்தச் சிறுவர்களின் கலகலப்பு ஒலியில் கேட்க முடிகிறது.

அந்த ‘டவரில்’ இரண்டு நிலைகள் உள்ளன; இடைநிலை ஒன்று மேல் நிலை ஒன்று. இடை நிலையிலேயே இந்த இன்பப் பொழுது போக்கு உணவு அகம் கடைகள் இருக்கின்றன. மேல்நிலையில் விரும்பினால் போய்வரலாம். நான் இடைநிலையோடு நிறுத்திக்கொண்டேன்.

அந்த டவர் பாரிசின் நடுவில் இருப்பதால் அங்கிருந்து அந்த நகரை முழுமையாகப் பார்க்க முடிகிறது. நம் ஊர் உயர் நீதி மன்றக் கட்டிடத்தில் பழைய ஒளிவிளக்குக் கட்டிடம் (light house) போன்றது. இது குறுகலானது. அது பரப்பு மிகுதி உடையது. அண்ணா நகரிலும் ஒரு ‘டவர்’ கட்டி இருக்கிறார்கள். அதுவும் இதைப் போன்ற கற்பனையை உடையதுதான். மேலே ஏறி அண்ணா நகரைப் பார்க்க முடியும். இன்னும் சற்றுத் தொலைக்காட்சிகளும் புலப்படுகின்றன. மனிதன் சில சமயம் உயரப் பறந்தால்தான் அவன் தன் வாழ்ந்த வாழும் சூழ்நிலைகளைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க முடியும். அதற்கு அடையாளமாக இந்த டவர்கள்’ அமைகின்றன. ‘ஈஃபில் டவர்’ ஏறிப் பார்த்த நான் இன்னும் அண்ணா நகர் டவரை ஏறிப்