பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

சொல்லத் தெரிகிறது; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? “அவன் மனச்சான்று உடையவன். உடையவனிடம் தேடிக் கொடுப்பான்” என்பீர்கள். நன்றி.

மற்றைய நகரங்களைவிட பிரான்சு தேசத்து நகரங்கள் பார்க்கத்தக்கவை; அரசர்கள் வாழ்ந்த வரலாறு. வீழ்ந்த நிகழ்ச்சிகள், அவற்றைக் காட்டும் ஓவியங்கள் அந்நகரங்களில் சித்திரித்துக் காட்டப்படுகின்றன. பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு தீட்டப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் அந்தக் கதைகளை விளக்கிக்கொண்டே செல்கிறார்கள், அந்தப் பிரெஞ்சு கைடுகளையே ஆங்கிலம் தெரிந்தவர்களை விளக்கிச் சொல்ல அமர்த்தி இருக்கிறார்கள். மன்னர்கள் ஆண்ட தேசம் அது. அவர்கள் LI)ணிமுடி.கள் பறிக்கப்பட்ட தேசமும் அது.

ஜெர்மனியில் சிறப்பாக ‘இட்லரின்’ கொடுங்கோன்மை; யூதர்களை ஒறுத்த நிகழ்ச்சிகள் இவற்றைச் சித்திரித்துக் காட்டுகிறார்கள். இரண்டாம் உலகப்போரின் விளைவு நமக்கு அதிகம் தெரியவில்லை. அங்கே அதுதான் எங்கும் பேசப்படுகிறது. ஹிட்லர் முறியடிக்கப்படாவிட்டால் உலகத்தின் சரித்திரமே மாறிவிட்டு இருக்கும்; இன்று உலகம் சுதந்திரம் ஜனநாயகம் சோஷியலிசம் என்ற இந்த மூன்று லட்சியங்களைப் பற்றி நினைத்தே பார்க்கமுடியாது. ஜெர்மானியர்கள் அவர்கள்தான் உலகாளப் பிறந்தவர்கள் என்ற கோட்பாடு வெற்றிபெற்றிருக்கும். ஜெர்மனி யுத்தத்தில் காலிழந்தவர்கள் ஒரு சிலர் நகரத்துக் கடை வீதிகளில் தள்ளுவண்டியில் அவர் உறவினர்கள் பல் தள்ளப்பட்டு வருவதைப் பார்க்க முடிந்தது.

ஜெர்மனி போர் முயற்சியில் ஈடுபட்டதால் எந்திர உற்பத்திகள் வேகமாகச் செயல்பட்டன. தொழில் வளம் பெருகியது. அதன் தொடர்ச்சி இன்று ஜெர்மனி எந்திர வளர்ச்சி மிக்க நாடாக வளர்ந்து இருக்கிறது, மதிப்பு