பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

'நீ பேசாதே’ என்பதுதான் இதன் அடையாளம்; அடக்குமுறையாகும்; யாரிடமும் தன்மையாக அடக்கமாகக் குறைந்த குரலில் பேசுவது அவர்கள் நற்பழக்கங்களில் ஒன்றாகும். ஒருவர் மற்றொருவரை மதிக்கும்போதே பணிவு ஏற்படுகிறது. இதைச் செய்யலாமா செய்து தரட்டுமா என்ற பாணியில் இப்பேச்சுகள் அமைகின்றன. பிறரிடத்தில் உள்ள நல்லதை எடுத்துச் சொல்லிப் பாராட்டுவது அவர்களிடம் காணப்படும் நல்லியல்பு எனக் கூறலாம். குழந்தைகள் இதனால் ஊக்கம் பெறுகின்றனர். ஆற்றலோடு வளர்கின்றனர். கடைகளில் பொருள் வாங்கும் போது நன்றி நவின்றே அதைப் பெறுகிறார்கள். மேலை நாட்டில் இது பழகிவிட்ட பண்பு ஆகும். மற்றவர்களைப் புண்படுத்தாமல் நடந்துகொள்வது எப்படி என்பதை அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

நகைப் பித்து

நம் நாட்டுத் திருச்சந்நதிகள் முக்கியமாக அம்மன் சந்நதிகளில் அத்தெய்வங்கள் அந்தக் கோயிலின் அந்தஸ்து ஒட்டி. ஆபரணங்கள் அணிந்துள்ளன. தெய்வங்களுக்குப் பொன்னும் மணியும் கிரீடங்களாகவும் அணி ஆபரணங்களாகவும் சூட்டி அழகு பார்க்கிறோம், இது நம் நாட்டுக் கலாச்சாரம்.

நம் பெண்கள் அழகாக இருக்கின்றனர். அவர்களுக்கு அந்தஸ்தைச் சேர்க்கப் பொன்னும் மணியும் அணியும் நகைகளாக அமைகின்றன. அவர்களை அழகாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறவர்கள் போட்டுக்கொள்கிறார்கள்; இல்லாதவர்கள் இருந்தால் நல்லது என்று எண் கிறார்கள். சில சமயம் இரவல் வாங்கியும் போட்டுக்கொள்கின்றனர். அழகுக்காகப் போட்டுக் கொள்ளும் நகைள் அந்தஸ்தின் அடையாளமாகவும் மாறுகிறது.