பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


"அது நாடகத்திலே வச்ச பேர்."

"பாவம், இத்தனை நல்ல பெண்ணைக் கெடுக்கவும் ஒரு பாவிக்கு மனசு வந்திச்சே" என்று வருந்தினார் குஞ்சிதபாதம்.

அவர் வருத்தம் அவனுக்குத் திகிலை யூட்டியது. ஒர் அரைக்கணத்தில் அத்திகில் மறைந்தது. நாடகக் கதை யிலேயே இன்னமும் அவர் நின்று கொண்டிருந்ததை அவன் அனுமானம் செய்து கொண்டான்.

“ஆமாங்க. பாவி ஆனபடியாலேதானுங்க, அவனுக்கு அத்தனை பெரிய பாவத்தைச் செய்யத் துணிச்சல் வந்திச்சு; மனமும் வந்திருக்கு.”

பெரியவர் ஏனோ ஊர்வசியை விழுங்கிட எண்ணினார்

அப்பார்வையை அவள் தாங்க வலிவு இழந்தாள் அப்பார்வை அவளுக்கு வலியைத் தோற்றுவித்தது.

“ஐயா, பே ப் ப ரி ேல - பெரிய அதிசயமெல்லாம் இருக்குதுங்களே" என்று அவரைத் திருப்பி விட்டாள். ஊர்வசி.

கஞ்சப் பிரபுவானாலும், சிரிக்க மறக்கவில்லை, வீட்டுக் காரர் பத்திரிகையைப் புரட்டினார்.

"ஐயா, வீட்டுக்கு எடுத்திட்டுப் போய் பார்க்கலாமே! ஆபீஸ் விட்டு வந்ததும் நானே வந்து வாங்கிக்கிறேனே ! கடையிலேருந்து, மத்தியான்னச் சாப்பாட்டுக்கு வரப்போ, வீட்டிலே கொண்டு வந்து பேப்பரைப் போட்டிடுங்க!” என்று அடைத்த பொறுப்பாகச் சொன்னான் அம்பலத் தரசன் !

குஞ்சிதபாதத்தோடு அன்றையச் செய்தித்தாளும் சென்றது.