96
நல்ல மனதில் நகைச்சுவை தோன்றுவது இயல்பு என்ற உண்மையை, அறிந்தவர்கள் சொல்லக் கேட்டிருந் தான் அவன்.
‘ஊர்வசி வாஸ்தவமாகவே நல்லவள்தான்! ஆனால் பாவம்?’
அவன் அவள் பேச்சை அனுபவித்தவாறு குளிப்பதற்குப் புறப்பட்டான்.
டவல், சோப்புப் பெட்டி ஆகியவற்றை எடுத்து நீட்டி னாள், ஊர்வசி.
“என் அம்மாதான் இங்கு இருக்கும்வரை இம்மாதிரி' டவலையும், சோப்புப் பெட்டியையும் எடுத்துத் தருவாங்க!”
“இப்போது அந்தப் பாக்கியம் எனக்கு விதிச்சிருக்குது இல்லீங்களா?”
“உம்!”
அவன் குளியலறைக்குப் போய் விட்டான்.
அவள் இரவு எழுதி முடித்திருந்த அந்தக் கடிதத்தை மீண்டும் உறையினின்று எடுத்து, மீண்டும் படித்து விட்டு உறைக்குள் திணித்து ஒட்டினாள்.
“அன்பர் திரு அம்பலத்தரசன் அவர்களுக்கு!”என்று எழுதினாள். பெருமூச்சு வந்தது அத்துடன் கண்ணிரும் வந்தது. ஒரு துளி உதிர்ந்து, அவள் எழுதிய- உறையின் மீது எழுதிய எழுத்துக்களில் தெறித்தது. அன்பர்’ என்ற எழுத்துக்கள் மட்டும் லேசாகக் கலைந்தன. அவ்வெழுத் துக்களில் மறுபடி விளம்பினாள், டைரியை மேஜையின் மையத்தில் வைத்தாள். அம்பலத்தரசனின் பார்வைக்குப் பளிச்சென்று படும் விதத்தில் எடுப்பாக வைத்தாள்.
காலடியோசை கேட்கவே, திரும்பினாள்.
தூய்மை மிளிர வந்தான் அம்பலத்தரசன்.