99
ஜிப்பாவைப் போட்டுக் கொண்டான் அவன்.
“டாக்ஸி பிடிச்சிட்டுப் போயிடலாம் !”
"ஆகட்டும்!”
"போர்ச்சுகீஸ் சர்ச் தெருதானே? பழைய வீடுதானே?”
“ஆமாம்!”
“நான் எப்போது திரும்பலாம்?"
“ஏன் என் உத்தரவைக் கேட்கிறீங்க? உங்க இஷ்டப் பிரகாரம் திரும்பிடலாம், ஆமா, உங்களுக்கு ஆபீஸ் பத்து மணிக்குத்தானே?”
“ஆமாம்!”
"ஆபீசுக்குப் புறப்பட்டுப் போறதுக்குத் தோதாய் உங்களை அனுப்பி வைச்சிடுவேன், அந்தக் கடமையிலே எனக்கும் இனிமே பங்கு உண்டில்லையா ?”
“ஓ.... கே! "
‘ஒரு விஷயம். இந்த லெட்டர் உங்களுக்கு, நான் எழுதினது. ஆபீஸிலே ஒய்வு கிடைக்கையில் அதாசப் பட்டது, ஆபீஸ் வேலைக்குக் குந்தகம் ஏற்படாத வகை யிலே ஒய்வு கிடைக்கையிலே-இதைப் படிச்சுப் பாருங்க. இதோ பாருங்க, என் டைரி இது! நானே வேண்டு மென்றேதான் இதை விட்டு விட்டுப் போகப் போறேன்! இதை உங்க விருப்பப்படி பார்க்கலாம் !”
டைரியை ஏதோ ஞாபகத்தோடு எடுத்துப் புரட்டினாள். பத்து ரூபாய்த் தாள்களைக் கொத்தாக எடுத்துக் கொண்டாள்."நாடகக் கூலி இது"என்று சொல்லி நாட் குறிப்பை முன்வைத்த இடத்தில் வைத்தான். தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே எழுந்தாள்.