பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

அவள் சந்நதியில் நின்றாள் ஊர்வசி. நின்றவள், சைகளைக் குவித்துக் கும்பிட்டாள். மாலை மாலையாகக் கண்ணிர் தொடுத்தாள், தன்னை மறந்த நிலையில் அவள் இருந்தாள்.

வினாடிகள் ஒன்று, இரண் டு என்று எண்களை உயர்த்திக் கொண்டிருந்தன.

அவளது அக் கோலத்தைக் கண்ட அம்பலத்தரசன் ஒரு கணம் மனம் அதிர்ந்தான்.

“தாயே! ஏன் என்னை இப்படிச் சோதித்துவிட்டாய்!இப்போது என் தாய்க்கு நான் என்ன பதில் சொல்வேன்? எப்படிப் பதில் சொல்லப் போகிறேன் ?”

ஊர்வசி கண்மலர்ந்து, வாய் விட்டுக் கேட்டுக் கொண் டிருந்தாள். .

அபயக்கரம் ஏந்தி, அருட்சிரிப்பும் ஏந்தி, கூர்மிகுசூலா யுதமும் ஏந்திக் கல்லாய் நின்றாள் அம்மன், ஊர்வசியின் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லக் காணோம்! கல் பேசாதா?தெய்வத்திற்குப் பேச வாய் இல்லையோ?

அவனுக்கு மேனி புல்லரித்தது;கண்கள் குளமாயின.

செருமினாள் அவள், காதளவோடிய கயல்விழிகள் துவளத் துவளச் செருமினாள்.

அவள் அழுதாள்.

களங்கப்பட்டு நின்ற பெண்மை அழுதது.

கறைப்படுத்தப்பட்ட கற்பு அழுதது.

ஊர்வசி அழுதாள்!

சுடுநீர் மாலை மாலையாக நீண்டது.