பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

தொகைக் கணக்கைப் பார்த்ததால் - எண்ணிப் பார்த்த தால் விளைந்திட்ட சிரிப்பு அது. ஆதாயமான சிரிப்பு அல்லவா?

மெய்யாகவே, ஆதாயமான சிரிப்புத்தான்! ஆவணத் தான் கோட்டைத் தேவர் குடியிருப்பிலிருந்து கண்டிச் சீமைக்கங்காணி ரேக்ளாவிலே வந்திருந்தார். தாம்பூலம் தரித்துக் கொண்டார். நாளைக்குத் தம்முடைய மாடி வீட்டிலே நடைபெறவிருந்த சமபந்தி விருந்துக்கு அழைத் தார். கும்பிடு கொடுத்தவர், கும்பிடு வாங்கிக் கொண்டார்; புறப்பட்டார்.

இப்படிப்பட்ட சமூகமாற்றம் ஆதாயம் இல்லையா, பின்னே?

காந்தி மகாத்மா செத்துப்போய் விட்டாரென்று நாக்கிலே நரம்பில்லாமல் யாரால்தான் பல்மேல் பல் போட்டு நெஞ்சு துணிந்து சொல்லிவிட முடியுமாம்?

ஆரோக்கியமான எண்ணங்களிலும் நினைவுகளிலும் சாம்பானுக்கு நெஞ்சு வலிகூட லேசாகக் குறைந்துவிட்ட மாதிரி தோன்றுகிறது.

“மச்சான்காரவுகளே ! ஆத்தாளோட சந்ததி வாசல் நெடுக நறுவிசாக் கூட்டிப் பெருக்கிப்புட்டேனுங்க; சாணி தெளிச்ச கட்டாந்தரையும் பொட்டுப் பொழுதுக் குள்ளாகவே துப்புரவாய்க் காய்ஞ்சும் போயிடுச்சுங்க. சரிபார்த்துக்கிடுங்களேன்! "

உயிருக்கு துணை நிற்கப்பழகிய மங்கத்தா சத்தியத் துக்கும் துணை நிற்கப் பழகியிருந்தாள்.

“சரி, புள்ளே! நீ சொன்னாச் சரிதாண்டி !”