i is
சாப்பாட்டு வேளை வந்தது.
அம்பலத்தரசன் சாப்பாட்டுக்கு மண்ணடிக்கு விரைந் தான். சாப்பாடு பரிமாறப்பட்டிருந்தது. ஆனால் அவனோ ஊர்வசியின் கடிதத்தைப் பிரித்துப் படிப்பதில் ஈடுபட்டான்.
கடிதம் பேசுகிறது.
‘அன்பிற்குரியீர் !”
பறிக்கப்பட்டுவிட்ட பெண்மையின் அலறல் அமைதிப் பட்ட நிலைமையில் நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கறைபட்ட பெண்ணாக நான் உங்களை நம்பி வந்தேன். என் நம்பிக்கையை நீங்கள் காத்துத் தந்து விட்டீர்கள். இவ்வாய்ப்பை நான் பயன் படுத்திக்கொள்ள விழைகிறேன்.
என்னை ஆள வந்த தெய்வமாக நீங்கள் எனக்குத் தரிசனம் தருகிறீர்கள்.
என் நிமித்தம் என் களங்கத்தையெல்லாம் வலிய ஏற்கத் துணிந்த உங்களது மனிதத்தன்மையை மனிதாபி மானத்தை - என் ஆயுள் பரியந்தம் மறக்கவே முடியாது ; மறக்கவும் மாட்டேன்
உங்கள் கடமை பொற்பு மிகுந்தது.!
எனக்கென ஒரு காப்பு வேண்டுமென்று நான் பல
காலமாகவே கனவு கண்டு வந்திருக்கிறேன். அந்தக் காப்பு காலங் கடந்து எனக்குக் கிட்டியிருக்கிறது.