பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117

கடிதத்தை உறைக்குள் திணித்து சட்டைப் பையில் சொருகிக் கொண்டான் அம்பலத்தரசன். நெஞ்செலும்பு உருகியது. கண்ணிர் சொட்டுக்கள் தெறித்தன !

[8]

அம்பலத்தரசனின் கருத்தைத் தாங்கிய 'பூ' ஏடு. அம்பலத்தரசனின் பார்வைக்கென வந்து காத்திருந்தது.

மாடிக் கதவைத் திறந்ததும் அவன் பார்வையில் விழுந்தது. அந்தப் பத்திரிகைதான். ‘பூ’ காரியாலயப் பையன் கொணர்ந்து போட்டுச் சென்றிருந்தான். கார்டு ஒன்றும் கிடந்தது எடுத்தான்

அவனுக்குத் தெரிந்த நண்பன் இரங்கநாதன் எழுதி யிருந்தான் 'இ’ போடாமல் தன் பெயரை எழுத மாட்டான் அந்த நண்பன். சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகிப் போயிரு ப் ப வ ன். ஏதோ அரசாங்க 'இன்டர்வ்யூ' விஷயமாக வருவதாகவும், தங்குவதற்கு ஒரே ஒரு நாள் மாத்திரம் அறையில் இடம் கொடுக்க வேண்டு மெனவும் குறிப்பிட்டிருந்தான் இரங்கநாதன்.

இரங்க அம்பலத்தரசன் தயாரா னான். பிறருக்காக இரக்கம் காட்டுவதென்பது அவனது ரத்தத்தோடு ஒட்டிய குணமாக அவனுக்கு அமைந்திருந்தது. 'உங்களைப் போல நல்லவர்கள் நாலு ரெண்டு பேர் இந்தப் பூலோகத்திலே இருக்கக் கண்டுதான் மிஸ்டர் அம்பலத்தரசன், மழைகூடப் பெய்கிறது' என்று அவனுக்குப் புகழ் மாலை சூட்டுவார்கள், அவன் தோழர்கள்.

அந்தி வெய்யில் சிந்துார வண்ணம் காட்டியது.