பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#19

தான். அந்த நிழல் படத்தைக் காலையில் ஊர்வசி பார்க்க நேர்ந்ததையும் அவன் மறந்து விடமாட்டான். இந்தப் படத்தை ஒரு நாளைக்கு நூறு தரமாவது பார்க்காமல் இருந்ததில்லை அவன்?

இப்போது ‘பூ’ அவன் கண்களை உறுத்தியது. வாழ் வதற்கே விமர்சனம் மிகவும் நேர்த்தியாக இருந்ததென்று அவனுக்குத் தெரிந்தவர்களும் அவனைத் தெரிந்தவர்களும் சொன்னார்கள். விமர்சனம் நேர்த்தியாக இருக்க வேண்டு மென்றுதான் அவனுக்குச் சன்மானமாக மாதத்திற்கு துாறு ரூபாய் தரப்படுகிறது என்கிற விஷயம் அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ?. யார் கண் டார்கள் ?

தன் நாடக விமர்சனத்தை ஒருமுறை மேலோட்ட மாகப் பார்த்தான் அம்பலத்தரசன் -

“...நாடகத்திற்கு நாயகியாக அமைந்திட்ட குமாரி ஊர்வசி மிகவும் இயல்பாகத் தோன்றினார். பண்பட்ட நடிப்புத்திறம் அவரிடம் சுடர்விட்டது. நயவஞ்சகன் ஒரு வனால் பலாத்காரமாகக் கற்பழிக்கப்படவிருந்த கட்டத்தில் அவள் நடத்தும் போராட்டமும், அத்துன்பத்திலிருந்து விடுபடச் செய்யும் முயற்சியும் வெகு தத்ரூபம். அபலை ஒருத்தி இப்படிப்பட்ட அ நியாயத்திற்கு இலக்காகும் நிலை யைக் காணும்போது, மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. தன் எத்தனம் பலன் காட்டாத நிலையில், அவள் கற்பு பறி போகிறது.

உடனே தனக்கு விதித்த துர்பாக்கியத்தை நினைத்து, நினைத்து மெளனமாக அவலக் கண்ணிர் வடிக்கும் கட்ட மும், அம்பிகையின் முன்னே விழுந்து, பெண்ணாகப் பிறந்திட்ட, நீ ஒரு பெண்ணின் கற்பைக் காத்துத்தரும் பொறுப்பை ஏற்றிருக்கக் கூடாதா, தாயே? நானோ அபலை, நீயோ சர்வ வல்லமைக்காரியாயிற்றே! உன் திரிசூலம் எங்கே? உன் வெஞ்சினம் எங்கே! நீய்ம் அந்த நயவஞ்சக