பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122


பார்த்துக் கொண்டிருந்தான். தன்னுள் ஏற்பட்டிருந்த மோகக் கிளர்ச்சியின் வெறித்தனத்தை விளையாடவிட அவன் ஒப்பவில்லை கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் சில கணங்கள் ஆழ்ந்தான்.

தன்னுள்ளே ஆக்கிரமித்திருந்த பேய்க் கணங்கள் விடுதலைப் பெற்றன. அவ்விடுதலைக்கு மூலாதாரமாக இருந்தது ஊர்வசி தன்பால் கொண்டிருந்த நல்லெண் ணமும் நன்னம்பிக்கையுமே என்பதையும் அவன் கணித்துக் கொண் டான். அப்புறம்தான் அவன் ஆங்கிருந்து டீக்கடை நோக்கிக் கிளம்பினான்.

பத்திரிகையின் தலைப்புச் செய்திகளில் மனம் சென்றது.

ஆடிக்காற்று வீசியது,

ரேடியோவைத் திருகினான். திருகினால் பாட்டு வருமா ? - திருப்பினான். அதாவது, ட்யூன்” செய்தான். இதயத்தைத் தொடும் ட்யூன் மிகுந்தது. அம் மகிழ்வில் திளைத்த அவனுக்கு, நேற்றுச் சுரந்த கவிதையின் ஞாபகம் எழுந்தது. ஊர்வசியின் முதற் சந்திப்பிலே அவள் சிரித்த அந்தப் புனிதச் சிரிப்பை நெஞ்சில் ஒலிக்கச் செய்து ஆனந்தமடைந்தான். அவள் சிரித்த வேளையில்தான் படைப்பின் விட்டகுறை தொட்டுத் தொடர்ந்ததோ? அச் சிரிப்புத்தான் விதியின் சிரிப்புக்கு விடப்பட்ட சவாலோ ?

தன்னை ம ற ந் து சி ரி த் து க் கொண்டான் அம்பலத்தரசன். கவிதையின் உணர்ச்சித் தீவிரம் அவனை மெய்மறக்க வைத்தது

ஊர்வசியின் நெஞ்சத்திற்குள் கூறிவிட்டுக் கூடுபாய்ந்து மீண்டான், அம்பலத்தரசன். -

டெலிபோனுக்கு ஒய்வில்லை போலும் !