பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24

ஒன்று :

4.விமர்சகர் அம்பலத்தரசன் இவர்களைச் சந்திக்கும் பாக்கியம் இன்று கிடைத்தது. என் நெடுநாளைய ஆசை நிறைவேறியது. எவ்வளவோ அன்பாகவும் அடக்கமாகவும் காணப்பட்டார். மன நெகிழ்ச்சி கொண்டவர் என்பது அவர் தலைமைப் பேச்சிலிருந்து விளங்கியது. இனம் விளங்காத ஒர் அன்பு அவர்பால் எனக்குப் பீறிடுகிறது. அவர் இந்த என் முதல் நாடகத்தின் நடிப்பையே இப்படிப் புகழ்கிறாரே - இன்னும் என் நடிப்புக் கலை வளர்ச்சி .ெ ப ற் ற | ல் அப்புறம் அவர் எவ்வளவோ பாராட் டுவாரே பெண்மையின் கற்பைப் பறிகொடுத்த அபலையை ஆதரித்து தன் மனையாட்டியாக ஏற்றுக் கொண்ட எழுத்தாளரை வெகுவாகப் பாராட்டினார். இந்தக் கட்டம் என் நெஞ்சைத் தொட்டது போலவே, அவர் மனத்தையும் தொட்டிருக்கிறது . அவர் அம்பலத் தரசன் மனம் உள்ளவர் ! -

இரண்டு :

“...பெண் ஒருத்தி அழகாக இருந்து விட்டால் உடனே அவளைக் காதலிக்கவும் காதல் கடிதம் எழுதவும் தொடங்கி விடுகிறது இளவட்டக்கூட்டம். எல்லாம் சினிமாவினால் வந்தவினை அதற்காகத்தான் பெரியார் சினிமாவே கூடாது என்கிறார் போலிருக்கிறது. பத்து நாளாக என்னையே சுற்றிச் சுற்றி வந்தான் தறுதலை’ ஒருவன். என் நாடகத்தைக் கண்டு என் மீது காதல் கொண்டுவிட்டானாம் பணக்காரனாம் ! நல்ல டோஸ்’ கொடுத்துவிட்டேன். என்னைப் பழி வாங்கியே சாவதாகச் சூள் உரைத்துச் சென்றான். அன்பர் பெயர் : நாகசாமி.

மூன்று :

‘ , ‘காதலே, வா நாடகம் ஐம்பதாவது நாளாக நடத்தப் பெற்றது. மதிப்புக்குரிய கலைஞர் தலைமை