பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


அவர். அவரது தூய அன்பு என்னை வாழ்த்தும்; அவரது தூய மனம் எனக்குப் புதுவாழ்வு அருளும் என் கனவும் பலித்து விடும். எனக்குக் கிட்டிய தோல்வியைக் கடந்து எனக்கு நிழல் தந்த அவர்தான் மனிதர் !...என்னுடைய களங்கத்தைத் தன் தியாக நெஞ்சிடைத்தாங்கி என்னை ஏற்க துணிந்த அவரே எனக்குக் கடவுள். ஆம் ; கடவுளை நான் தரிசித்து விட்டேன் !

அத்துடன் முடிந்தன நாட்களின் குறிப்புக்கள்.

அம்பலத்தரசன் உணர்ச்சி வசப்பட்டு பரவச நிலையில் அமர்ந்திருந்தான்

அவ்வுணர்வின் நாயகியாகிய ஊர்வசி ஆடினாள் நகை குலுங்க ஆடினாள். அவன் நெஞ்சம் ஆடுகளம் ஆனது. அது ஜோதிகூடித் திகழ்ந்தது. ‘என் சொத்து என் ஊர்வசி என் நெஞ்சைத் திறந்து காட்டிவிட வேண்டும் அவளுக்கு அப்போதுதான் எனக்கும் ஆறுதல் அவளுக்கும் ஆறுதல். கெட்டவனாக இது வரை இருந்த என் நிலையையும் ஒளிக்க மாட்டேன். நெஞ்சை ஒளித்து வஞ்சகம் இருக்கக் கூடாதல்லவா ?

எல்லா நடப்பையும் விளக்கித் தன் தாய்க்குக் கடிதம் போட்டுவிட வேண்டும் என்றும் முடிவு செய்தான். தந்தையின் முகம் அறியாத அவனை தன் உயிரைக் கொடுத்து வளர்த்து ஆளாக்கிய தெய்வம் அவன் அன்னை தஞ்சாவூரில் பாம்பாட்டித் தெருவில் ஆப்பக்காரி. அஞ்சுகத்தம்மாள்’ என்ற பட்டப் பெயரைச் சுமந்துதான் அவனை ஆளாக்கினாள். அந்தத் தாய் ! . . . . . ;

மனம் என்னும் வேள்வியைக் கண்டு செலுத்த, வாழ்க்கை என்னும் தீக்கு, தியாகம் என்னும் ஆஹாதியைப் பயன்படுத்தும் பக்குவம் அவனுள் பண் படத் தலைப் பட்டது. இயல்பாகவே அவனது உதிரத்தில் நிலைத்துப்