பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32

திருந்தால் அப்புறம் நம்ம தமிழ் பண்பாடு என்ன ஆகிறது. இதுதான் என் சந்தேகம்’ என்று சொல்லி நிறுத்தினான்

கருணாநிதி,

அம்பலத்தரசன் அவனை உறு த் து ப் பார்த்தான் பார்த்து விட்டு வேதனையோடு சிரித்தான்.

‘முதலிலே என் சந்தேகத்துக்குத் தயவு பண்ணி விளக் கம் கொடுக்கிறீங்களா? தமிழ்ப் பண்பாடு அப்படின்னு சொல்லுறிங்களே ? - அதுக்கு ஒரு விளக்கம் தர முடியுமா?” என்று கே ள் விக் கு எதிர்க் கேள்வி கொடுத்தான் அம்பலத்தரசன்.

“பொண்ணுக்குக் கற்புதான் உயிர் அத்தகைய கற்பு பறிபோயிட்டால், உடனே அவள் தன் உயிரை போக்கிக்கிட வேண்டியதுதான் பெண்ணுக்குரியவிதி! இதைத்தான் தமிழ்ப் பண்பாடுன்னு சொல்லுறோம்.இதுவேதான் காலம் காலமாய் நம் தமிழ்நாட்டிலே பரவலாகக் கடைப் பிடிக்கப்பட்டு வருது’’ என்று ஆணித்தரமாகக்குறிப்பிட்டான் கருணாநிதி.

“ஆல்ரைட் அநீதியாய்க் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு நீங்க கொடுத்த முடிவு இது! இதைதான் நீங்க தமிழ்ப் பண்பாடுன்னு சொல்றீங்க! ஆனா, அநியாயமாகக் கற்பழிக் கப்பட்ட பெண் கடலிலே விழுந்து செத்திட்டால் மட்டும் அவளுக்கு உண்டான அந்த அவப் பெயரும் அவளோடேயே செத்திடும், உடனே நம் தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப் பட்டு விடும்னு நீங்க நம்புறீங்களா?’ என்று அடுத்த வினா வைச் சொடுக்கினான் அம்பலத்தரசன். மன்யாழ் சோகச் சுருதி கூட்டியது. .

கருணாநிதி இமைப்பொழுது இமைக்காமல் இருந்தான் லேசாக அரும்பியிருந்தது வேர்வை,

‘அந்த அவப் பெயர் எப்படி மறைய முடியும்?’ என் அம்பலத்தரசனையே கேள்வி கேட்டான் அவன். -