பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


தான் பிரம்மா சிருஷ்டிக்கிறரன். அவன் தத்துவத்துக்கு விரோதமாக இயங்குவதற்கு இந்தப் பிறப்புக்கு எவ்வித அதிகாரமும் இருக்கக் கூடாது. வாழ்க்கை வாழ்வதற்கு! அப்படின்னு சொல்லுறதாலே மட்டும் தமிழ்ப் பண்பாடு வாழ்ந்துவிட முடியாது !

விதி வசத்தாலே கற்புநிலை கெட்ட பெண்களுக்கும் இந்த உலகத்திலே வாழ வழியிருக்க வேண்டும்.இது அவங்களுடைய உரிமை ; பிறப்புரிமை! அதற்கு உண்டான வழி வகைகளையும் நம் சமுதாயம் செஞ்சுக்கிட்டு வராமல் இல்லை. அவர்களுக்கு நிழலாக ஆசிரமங்கள் இருக்கு. இது மட்டும் போதாது. அவங்களை ஏற்று ஆதரிக்கும் மனபலம் கொண்டலங்களும் நம் நாட்டிலே வளர வேணும் ! அதுதான் மனித தர்மமும்கூட. அதுவே தான் நான் கட்டுகிற தமிழ்ப் பண்பாடுமாகும் !"

அம்பலத்தரசனுக்கு இருமல் வந்தது. மேலும் ஒரு சிகரெட் பற்றிக் கொணடது. இருமலின் தொடர் சுயநலம் கடந்தது.

"ரொம்பவும் பயமான கருத்து உங்களுடையது', என்று தீர்ப்பளித்தான் கருணாநிதி.

'உங்க மாதிரி உள்ளவங்களுக்கு உலகம் என்றாலே, சமூகம் என்றாலே எப்போதுமே ஒரு பயம் இருக்கத்தான் செய்யும் . அதெல்லாம் சுத்த ஹம்பக் ! . . வெறும் நாடகம் அது !. நீங்க அஞ்சுகிறதாகச் சொல்கிற அந்த உலகமும், அந்தச் சமுதாயமும் உங்க பணத்தைக் கண்டு தான் பயப்படுது ! இதுதான் யதார்த்தம், !"

அம்பலத்தரசன் தொடர்ந்தான். சோளம் பொரிந்தது பேச்சினால்.