பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38

தலைநிமிர்ந்து அவன் நடந்தான்.

...கற்பு என்கிறது பெண்ணுக்குள்ள தனிச் சொத்து மட்டுமல்ல! ஆணுக்கும் உள்ள தனிச் சொத்துத்தான்! .

தான் கருணாநிதியிடம் எடுத்துக்காட்டிய அக்கருத்து இப்பொழுது தன்னையே விழுங்கிக்கொண்டிருந்ததை துல்லி யமாக உணர்ந்து கொண்டிருந்தான் அம்பலத்தரசன். அவனது உந்திக்கமலம் வகுத்த ரத்தக் கண்ணிர் அவன் மனச்சாட்சியைக் கழுவிக்கொண்டிருந்ததோ ?

“ஊர்வசி, நீ என்னை மன்னிப்பாயா?” வேதனையின் கழுவாயில் அவன் துன்பம் துடித்தது.

ஒர் ஆங்கிலேய இந்தியர் மனையில் கடிகாரம் எட்டு அடித்தது.

ஊர்வசி சிரிக்க மறந்த வேளை எது ?

[11]

மொக்கினுள் உயிர் மணக்கும் வாசமெனத் தோன்றி

னாள் ஊர்வசி,

அழகுணர்ச்சியோடு அழகை அனுபவிக்கும் பந்தந்தோடு பாந்தத்தோடு அவளை ஆழமாகப் பார்வையிட் டான் அம்பலத்தரசன்.

ஊர்வசி புனிதம் ஏந்திப் புன்னகை கூட்டினாள்.

“வாங்க. உங்களுக்கு முந்தி நான் வந்திட்டேன்!’

என்று கூறினாள் அவள். நட்சத்திரப் பூக்கள் அவளது கொண்டைப் பூக்களில் மொய்த்திருந்தன.