பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139


அவளது பேச்சு அவனுக்கு விடுகதை போட்டது. அவள் இந்நேரம் எங்கே போயிருந்தாள் ?

அவளது நெற்றித் திலகத்தைச் சுற்றிலும் வேர்வை முத்துக்கள் மின்னின.

உள்ளங் கைகளைத் தடவி விட்ட வண்ணம், வண்ணம் ஏந்திய ஆச்சரியத்தை வினாவாக்கி அவளை மீண்டும் நோக் கினான் அவன்.

கூடம்

‘நல்ல பாடத்தைப் பிரத்யட்சமாச் சொல்லிக்கொடுத் திட்டீங்க இதயமில்லாத அந்தம் பெரிய இடத்துப் பிள்ளை க்கு’... என்று தெரிவித்தாள் அவள், உணர்வின் தீவிரம் பொங்க.

‘நீங்க...நீ வந்திருந்தியா, ஊர்வசி?”

“ஊம். உங்களைக் காணோமேயென்று உங்களைத் தேடி வந்துக்கிட்டிருந்தேன். பூரா நடப்பையுமே என்னா லே பார்க்க முடிஞ்சது!”

‘அப்படியா?”

“ஆமாம்!”

“தர்மத்தை உணர்த்தியதுக்கு எனக்கு அறை கிடைச் சது தர்மத்தை உணராததுக்கு அவனுக்கு அறை கிடைச் சது!’ என்று ஆறாத வேதனையோடு பேசினான் அவன்.

“அந்தப்பாவி கடைசியிலே உங்ககிட்டே சவால் விட்ட தும், தன்னிஷ்ட மில்லாமல் கெடுக்கப்பட்ட அபலைப் பெண்ணுக்குக் கட்டாயம் வாழ்வு தருவேன், அந்த மனம் எனக்கு இருக்கு து! அப்படின்னு நீங்க விடை சொன்ன வுடனேயே நான் வந்து இதோ பாரய்யா உதாரணப்