பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5


எரிந்து கொண்டிருந்த அம்மன் தீபங்களுக்கு எதிரே

எரியாத தீபமாகவும் பாதாதிகேசம் வரையிலும் ஈரம் சொட்டச் சொட்டவும் மூடிய விழிகளோடும், மூடாத நெஞ்சோடும் கூப்பிய கரங்கள் கூப்பியபடியே, அங்காளம் மனைப் போலவே, கற்சிலையாக நின்று கொண்டிருக் கிறாள் தெய்வானை - காலடியில் நனைந்த பூக்கள் நனையாமலே கிடந்தன !

கன்னங்கள் இரண்டிலும் ஊசி குத்த இடம் வைக்காமல் பட்டை தீட்டின கணக்கிலே நகக் கீறல்களும் ரத்தத் தழும்புகளும் பளிச்சிடுகின்றன.

நெற்றிக் குங்குமம் கசிந்து உருகி வழிந்து, கண்களின் கண்ணிரிலே சங்கமமாகி, மார்பில் இழைந்து கிடந்த மங்கலத் தாலிப் பொட்டிலே சிந்தி சிதறிக் கொண்டே யிருக்கிறது தாலிப் பொட்டுக்கு ரத்தப் பொட்டுவைத் திருக்குமோ ?

“ஆத்தாடியோ தெய்வானைப் .ெ ப ண் .ே ண !’ சாம்பான் அழைத்தார்.

மங்கத்தா கூப்பிட்டாள் ; தெவ்வி !”

ஊகூம் !

பேச்சு மூச்சு இல்லை !

“மச்சான்காரவுகளே ! அந்தி மசங்கிப் பூடுச்சுங்க : மணி அடிங்க ; அப்பாலே, ஆத்தா நம்ம மேலேயும் சடனைப்பட்டுக்கிடப் போறா !” என்று நினைவூட்டினாள், கொண்டவள் மங்கத்தா.

உயிர் கொண்டவர் சுயப் பிரக்கினை அடைந்தார்.

சாயரட்சைப் பூஜை நடக்கிறது. - “. . . ஆத்தா சிரிக்கிறாள்; சிரித்துக் கொண்டே இருக்கிறாள்!