143
அப்போது அங்கு வந்தாள் மீனாட்சி அம்மாள் விருந் தாளியை வரவேற்றாள். பிறகு மகளைப் பார்த்து, "மாப் பிள்ளைக்கு போன் பேசினதுக்குள்ள சமாசாரத்தைச் சொல்லலையாம்மா" என்று பையக் கேட்டாள் முதியவள்.
‘இல்லையே! என்கிற பாவனையில் வருத்தம் காட் டினாள் ஊர்வசி. "உங்களைத் தேடிக்சிட்டு ஒரு பொண்ணு வந்திச்சு. ரொம்ப முடியாமல் இருக்குது. உள்ளே படுக்க வச்சிருக்கோம்” என்று குறிப்பிட்டாள்.
ஊர்வசியைத் தொடர்ந்து உள்ளே சென்றான் அம்பலத்தரசன். அவன் கால்கள் பின்னுக்கு இழுத்தன சமாளித்தப்படி உள்ளே நுழைந்தான்.
உடல் நலிந்தும் அழகு தலியாமல் படுத்த படுக்கை யாகத் கிடந்தாள் பெண் ஒருத்தி.
அவளைப் பார்த்தான் அம்பலத்தரசன். பார்த்த மாத் திரத்திலே, அவனிடமிருந்து கண்ணிர் பெருகிற்று
"உங்களுக்கு சொந்தமா இந்தப் பெண்?"
“சொந்தம் போலத்தான். சற்று முன்னே சொன்னேனே என்னோட பழைய திருவிளையாடலைப் பத்தி, அந்த விளையாட்டிலே பங்கு கொண்ட இவளும் என் தோழி களிலே ஒருத்தி!...” என்று சூட்சமமாகச் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணின் த ைல மா ட் டி ல் குந்தினான் அம்பலத்தரசன்.
ஸ்மரணை தப்பிக் கிடந்த அ வ ள து நெற்றியைத் தொட்டுப் பார்த்த அவன் கைகள் விரைத்தன. ஆனால் மறுகணம் அவன் கரங்கள் பின்னடைந்தன. அவன் மேனி நடுங்க, குரல் நடுங்க, "மங்கையர்க்கரசி" என்று கூப்பிட் டான். .