}44
குரலின் முதல் தொடுப்பிலேயே அந்த மங்கை யர்க்கரசி விழித்துக் கொண்டாள்.
“ஆ! நீங்களா? வந்திட்டீங்களா? நல்லா இருக் கீங்களா?’ என்று குசலம் விசாரித்தாள். ஜீவனற்ற சிரிப்பு வெளுத்த உதடுகளில் இழைந்தது.
அவள் அன்பு கறை படாதது. அது அவன் அன்பைத் தொட்டது. நான் நல்லா இருக்கேன். ஆனா, நீ நல்லா இல்லையே?’ என்று தேம்பினான்.
“நான் இப்போ அனாதையுங்க. என்னை எல்லாரும் கை விட்டுப்புட்டாங்க. கடைசியாக எனக்கு உங்க ஞாபகம் வந்திச்சு. ஆனா உங்க இடம் எனக்குத் தெரியாது. காலம்பற நீங்க இங்கே வந்ததாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னாள், இந்தக் காய்ச்சலோட வந்தேன் உங்களைத் தேடி! தொட்டுப் பாருங்க, உடம்பு கொதிக்குது’
அவன் மெளனமாக வீற்றிருந்தான்.
அவனுக்குப் பதிலாக ஊர்வசி அந்தப் பெண்ணின் மேனியைத் தொட்டுப் பார்த்தாள். வலது கை மோதிர விரலின் மோதிரம் டால் அடித்தது.
“ஐயா! உங்களுக்குக் கடன்பட்டவன் நான், என்னை அனாதை பி ண ம ா க் கி டாமல் க ைர சேர்த்திடுவீர் களா ஐயா? இந்தப் பாவியை ஒரு ஈ, காக்காய்கூட ஏறெடுத்துப் பார்க்க ஒப்பாதுங்க.’’
அவள் அழுதாள்.
‘நீ அழாதே! உன்னைக் காப்பாத்துறது என் கடமை
களிலே ஒண்ணு! உன் அன்புக்கு நானும் கடன் பட்ட வன்தான்! இனி நீ அனாதையில்லே! நீ பிழைச்சிடுவே!