பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149


தான் ஈன்ற குட்டிகளைப் பாசம் பொங்கப் பார்த்து அவற்றை ஒவ்வொன்றாகப் பாசத்தோடு நக்கிக் கொண்டிருந்தது தாய் நாய் ஒன்று.

இக்காட்சியை இமை வலிக்கப் பார்த்துக் கொண்டிருந் தான் அவன் அப்போது அவன் மனம் தாய் நாய் இருக்கிறது ! ஆனால் தந்தை நாய் எங்கே ? என்று ஒரு கேள்வியை வீசியது. அவன் சுற்றிச் சூழ நோக்கினான். தாய் மட்டும்தான் தட்டுப்பட்டது !

அவன் தடுமாறிக் கொண்டே நடையைத் தொடர்ந் தான். ஊர்வசியின் நினைவுடன் அவன் மனமும் தொடர்ந்தது விதி வசத்தால் தன் வயிற்றில் கரு வளரும் நிலை ஏற்பட்டால் அந்த ஒரு முடிவுக்குக் குறுக்கே தான் என்றென்றும் நிற்கக் கூடாது என்று தனக்கு ஆணை’ இட்டிருந்த அவளது கடிதத்தின் இதயம் இப்போதும் அவனைத் தொட்டது. உணர்வு கலங்க உள்ளம் கலங்க அவன் ஒரு வினாடி அப்படியே சிலையாக நினறான். மீண்டும் ஊர்வசியைச் சூழ்ந்தது அவன் மனம், “ஊர்வசியைப் பளிவந்தமாகக் கெடுத்த அந்தப் பாவி யாராக இருக்கும் ? என்னிடம மட்டுமல்லாமல், அவள் தாயிடமும் அவள் அந்தப் பாவியின் பெயரை ஏன் சொல்லமறுத்து விட்டாள் ? இதில் சஸ்பென்ஸ் என்ன இருக்க முடியும் ? பாவி, அவள் ! அந்தத் துரோகியை மட்டும் ந ா ன் அறியமுடிந்தால், அவனை ஊர்வசிக்கு முந்திக்கொண்டு பழி வாங்கி விடுவேனே தன் ஆத்தரம் முழுவதையும் சுழலாக்கித் தன் நெஞ்சக் கடலிலே மறைத்து வைத்திருக்கிறாள் ஊர்வசி அவள் மனம் எனக்குப் புரிகிறது. அவள் வேதனையை நானும் அனு பவிக்கிறேன். சுழல் என்றைக்கு அந்தப் பாவியைச் சிக்க வைக்கப் போகிறதோ, தெரியவில்லை!

அம்பலத்தரசன் இப்போது தன்னைப் பற்றியும் ஊர்வசியைப் பற்றியும், மங்கையர்க்கரசியைப் பற்றியும் நீதிதேவன் இருப்பிடத்தில் அமர்ந்து எண்ணிப் பார்த் தான். ஊர்வசி மட்டுமே நிரபராதியாக அவனுள்