İŠ į
ஊர்வசி தண்ணீர்ச் செம்புடன் வந்து அவனிடம் நீட்டினாள். - -
‘கை கழுவுங்க” என்றாள்.
“இதோ வருகிறேன் .’ என்று அவன் மூலைப் பகுதியை நோக்கினான்.
நேரே போங்க. வழுக்கும் பார்த்துப் போங்க. வழுக்கி விழுந்திடாதீங்க!”
அவன் புன்னகை கொண்டு அவள் சுட்டிய பகுதிக்கு எச்சரிக்கையுடன் போய்த் திரும்பினான். கை கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே நுழைந்தான் பெரிய இரும லொன்று வெடித்தது.
“இனிமே நீங்க சிகரெட்டைக் குறைச்சுக்கங்க. அதாலேதான் இப்படி இருமுது.’
அவள் அவனைப் பரிதாபத்துடன் பார்த்தாள். அப் பார்வையில் நம்பிக்கை இருந்தது.
‘ஆகட்டும் என்று சொல்லித் தலையை இணக்க முடன் உலுக்கினான் அவன். அவள் வேண்டுகோளை அவன் ஆணையாகவே மதித்தான்.
கோழிப் பிரியாணி படைக்கப்பட்டது. அதன் சூடு தலை வாழை இலையின் ஒரப் பகுதிகளைக் கன்றச் செய்தது.
சாப்பிடுங்க!”
“நீயும் சாப்பிடு!”
“எனக்குப் போடலையே?’’
“நான் போடுறேனே’ என்று சொல்லித் தன் இலை யில் இருந்த பிரியாணிச் சோற்றையும் கரித் துண்டங் களையும் ஒரு முனைக்கு ஒதுக்கி, எஞ்சியிருந்த இலையை அளவு பார்த்துக் கிழிக்க முனைந்தான்.