பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

‘அந்தாப் பாருடா மணி, அந்த விளையாட்டு ஏரோங் டேனைத் தாண்டா நாளைக்கு எங்கப்பா எனக்கு வாங் கித் தந்தார்ட!” என்றது குழந்தை.

- போடா, அது எங்க வீட்டு ஏரோப்ளேனுடா. எங்கம்மா சொல்லிச்சுடா, பாலு!” என்றது இன்னொரு குழந்தை,

குழந்தைகளின் இலக்கணம் கடந்த அந்தச் சின்னஞ் சிறு உலகத்தினின்றும் தப்பிப் பிழைத்த விமானத்தை அண்ணாந்து பார்த்து நகைத்தவனாக அவன் நடந்தான்.

முத்துமாரிச் செட்டித் தெருவின் செம்பாதி பின் தங்கியது.

அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அம்பலத்தரசனுக்கு ஊர்வசியின் நி ைன வு கிளர்ந் தெழுந்தது. அவள் இல்லாத அந்த இடம் வெறுமையாகக் காட்சியளித்தது. ஊர்வசியைத் தேடிச் செல்லத் துடித்தான் அவளை இங்குவரச் சொன்னதை எண்ணி, அந்நினைவை மாற்றிக் கொண்டான். மே ைஜ யி ல் இருந்த அவளது டைரியை எடுத்துப் பெட்டிக்குள் திணித்தான். அவளி டம் அவள் டைரியைக் கொடுத்துவிட வேண்டுமென்றும் ஞாபகப்படுத்திக் கொண் டாள் அவன். மறைந்து கொண் டும். மறைத்துக் கொண்டும் வாழ்ந்து வருகிற மனிதப் பிராணிகள் நலிந்திருக்கிற இந்த உலகத்திலே ஊர்வசி ஒர் அபூர்வம்! அந்த அபூர்வத்தில் எனக்கு ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டால் அதுவே எனக்கு ஆத்ம திருப்தி தரும்!...” -

அன்றிரவு ஊர்வசி தன் அறையில் நம்பிக்கைளின் நிர்மலத்தோடு, நிஷ்களங்கத்தின் நோன் போடு உறக்கம் கொண்டிருந்த போது, அழகு கொஞ்சிய அவளுடைய மார்பகத்தில் காணப்பட்ட அந்த ரத்தத் தழும்பை அவன்